Full Text Transcript
Text below was recognized via OCR from scanned pages and may contain minor errors. Mathematical formulas and symbols may be approximate - please refer to the PDF for the exact equations.
Civil Services (Main) ଆ
Examination- 2025 SLPM-C-TML
தமிழ் / TAMIL
(கட்டாயத்தாள்) / (Compulsory)
கால அளவு : மூன்று மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 800
Time Allowed : Three Hours Maximum Marks : 300
வினாத்தாளுக்கான விதிமுறைகள்
வினாக்களுக்கு விடை எழுதும் முன் கீழ்க்காணும் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும் :
எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
வினா/வினாப்பகுதிகளுக்கான மதிப்பெண்கள் அவற்றின் எதிரே தரப்பட்டுள்ளன.
விடைகள் தமிழில் (தமிழ் எழுத்தில்) மட்டுமே எழுதுதல் வேண்டும். அல்லது வினாத்தாளில்
குறிப்பிட்டபடி எழுதுதல் வேண்டும்.
எந்தெந்த வினாக்களில் சொற்களின் எண்ணிக்கையளவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதன்படி
விடை எழுதுதல் வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையளவுக்கு மிக
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விடை அமைந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
வினா-விடைக் கையேட்டில் எழுதாத பகுதி/பக்கங்கள் இருப்பின் அவற்றின் குறுக்கே கோடு
இடவும்.
Question Paper Specific Instructions
Please read each of the following instructions carefully before attempting questions :
All questions are to be attempted.
The number of marks carried by a question is indicated against it.
Answers must be written in TAMIL (Tamil script) unless otherwise directed in the
question.
Word limit in questions, wherever specified, should be adhered to and if answered in much
longer or shorter than the prescribed length, marks may be deducted.
Any page or portion of the page left blank in the Question-cum-Answer Booklet must be
clearly struck off:
SLPM-C-TML 1
பின்வருவனற்றுள் ஏதேனும். ஒன்று குறித்து 600 சொற்களில் .و
கட்டுரை வரைக : ৷ 100
७) இந்திய அறிவு மரபின் பொருத்தப்பாடுகள்
(४) இன்னும் ஒரு உலகப்போர் உருவாகும் அச்சம்
(০) இணையவழி பணம் கொடுக்கல் - வாங்கலின்
நன்மைகள்
(त) விளையாட்டுத் துறையில் இந்திய மகளிரின் பங்கேற்பு
வளர்ச்சி
૦2. பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில்
தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும்
சுருக்கமாகவும் விடை எழுதுக : 12x5=60
பல்வகை - உயிரியல் என்பது பூமியிலுள்ள
உயிரினங்கள் அவற்றின் மாறுபட்ட தன்மைகளுடன்
இயைந்து வாழ்வதைக் குறிக்கும். அவற்றுக்குள் ஓத்த
தன்மைகளும் மாறுபட்ட இயல்புகளும் இருந்தாலும் ஒரே
குழுமமாக இயைந்த அமைப்பு ஒன்றை உருவாக்குவது
குறித்தது. இப்போது அந்த இயைந்த வாழ்வும்
தகவமைப்பும் கடினமான சிக்கல்களை எதிர்கொண்டு
வருகின்றன. வெப்பமண்டலக்காடுகளின் அழிப்பும்
சிதைவும் தான் அதன் காரணங்கள் என்று சொல்ஜிறார்கள்
அறிவியலாளர்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் 5 முதல்
10 சதவீதக்காடுகள் அழிக்கப்படுவதும் சிதைக்கப்படுவதும்
நடக்கின்றன என்பது அவர்களின் உத்தேசக்கணக்கு
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த கால் நூற்றாண்டின்
முடிவில் இங்குள்ள உயிரினங்கள் பல இல்லாமல்
போய்விடும்.
SLPM-C-TML 2
மரபுத் 65٢ 2۰6ب அழிவுச் சிக்கல் உடனடியாகத்
தடுத்து நிறுத்தப்பட வேண்டும் நீர் நிலைகளில் புதிய நீரை
நிரப்புவதும், ஆறுகளில் சூழலுக்குப் பொருந்தாத புதிய
உயிரினங்களை அறிமுகப்படுத்துவதும் ஒருவித
நாடகத்தன்மையோடு இங்கேநடக்்கின்றன. கடலுக்குள்
இருக்கும் தீவுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பவை
அவையும் மரபுத்தொடர்ச்சி இல்லாமல் அழிவையும்
சிதைவையும் சந்திக்கின்றன. பூமியின் இயல்பான
நிலைமையைத் தக்கவைக்க அவை தடுத்து நிறுத்தப்பட
வேண்டும்.
உயிரினங்களின் அழிவு, பல்லுயிரினங்களின்
வேறுபட்ட தன்மையைக் குறைத்தல், அவற்றின்
வாழிடங்களைச் சிதைத்தல் போன்ற இந்த தலைமுறைக்கு
மட்டும் மைகளை உண்டாக்கும் என்பதில்லை,
எதிர்காலத் தலைமுறைகளுக்கும் தாக்கங்களை
உண்டாக்கும். அறிமுகமில்லாத உணவுப் பொருட்களாலும்,
மருந்துகளாலும். தொழிற்சாலைக் கழிவுகளாலும்
உயிரினங்களின் அழிவு தொடர்ந்து நடக்கின்றது. சூழல்
அமைப்பு அதன் இயல்பான தன்மையை இழக்கும்போது,
மனிதர்களுக்குப் பயன்படும் தன்மை குறைந்துவிடும்.
அதனால் புதியபுதிய உயிரினங்கள் நுழைந்து புதியபுதிய
விளைவுகளை உண்டாக்கும் மணல் அரிப்பு,
நீர்த்தேக்கங்களில் நல்நீர் மாற்றம், உள்ளூர் தடபவெப்ப
நிலைமாற்றம், பாலைவனமாக்கம் போன்றவை
உற்பத்தியையும் வளர்ச்சி நிலையையும் கெடுத்துவிடும்.
உயிரினங்களைப் பாதுகாக்கும் உயிரியல்
பூங்காக்களைத் திட்டமிட மூன்று வழிமுறைகளைப்
பின்பற்றலாம். நுகர்வுப் பயன்பாட்டு வழிமுறை என்பது
எரிபொருளாகப் பயன்படும் விறகு, கால்நடைத்தீவனங்கள்,
SLPM-C-TML 3
உணவாகப் பயன்படும் விலங்கு இறைச்சி
போன்றனவற்றைப் பயன்படுத்தும் அளவைத்
திட்டமிட்டுக்கொண்டு செயல்படுத்தும் வழிமுறை.
அத்தோடு இவற்றைச் சந்தைக்குக் கொண்டு போகாமல்,
பயனாளிகளுக்கு நேரடியாக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும்
இதில் அடங்கும். உற்பத்திவழிமுறை என்பது இன்னொன்று.
இதில் வணிகத்திற்கும் சந்தைக்கும் தேவையான மூங்கில்,
மீன் இறைச்சி, தேன் போன்றனவற்றை வணிக நோக்தில்
வளர்த்து உற்பத்தி செய்து தருவதைக் காண்கிறோம்.
நுகர்வல்லாத வழிமுறை சூழல் அமைப்போடு நெருக்கமான
தொடர்புடையது நீரைத்தேக்கும் தடுப்பணைகள்
உருவாக்கம், ஒளியமைப்பாக்கம், தட்பவெப்பச் சீர்மை
உருவாக்கம், மணல் அரிப்புத் தடுப்பு போன்றனவற்றைக்
கொண்டு அரியவகை உயிரினங்கள் தொடர்ந்து
வாழ்வதை உறுதி செய்வதாகும்.
இம்முன்று வழிமுறைகளில் உற்பத்திவழி
முறையையே கொள்கை வகுப்பாளர்கள் ஏற்றுப்
பாராட்டுகிறார்கள்; நடைமுறைப்படுத்த நினைக்கிறார்கள்,
ஏனென்றால் அவர்கள் பெருந்தொழில் வளர்ச்சியோடு
தொடர்புடையவர்கள். அதனால் காடு வளர்ப்பு,
மீன்வளர்ப்பு, போன்றனவற்றைச் சந்தைக்குரியதாக
நினைக்கிறார்கள். நாட்டின் வருவாயைப் பெருக்குவதில்
நேரடித் தொடர்புடையன என்பதால் அவர்களிள் விருப்பம்
அதில் வெளிப்படுதிறது.
(a) பல்வகை - உயிரியல் என்றால் என்ன ? 12
യ மரபுத் தொடர்ச்சி அழிவுச் சிக்கல் என்றால் என்ன ? 12
SLPM-C-TML 4
Q3.
©) ஒன்றுக்குள் ஒன்றாய் வகைப் படுத்தப்படும்
தாவரங்கள், உயிரினங்கள் அழிவதால் ஏற்படும்
அச்சறிலைகள் எவை ?
(ત) நுகர்வு நோக்கமில்லாத பயன்பாட்டு மதிப்பு என்றால்
என்ன ?
(০) கொள்கை வகுப்பாளர்கள் எவ்வகை வழிமுறையை
அதிகம் ஏற்றுப் பாராட்டுதிறார்கள் ? ஏன் ?
கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு
அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக.
தலைப்புத் தேவையில்லை.
எதுவென்று அறிய விரும்புகிறவர்கள் 89 ما
அதனைத் தேடிப் போக வேண்டும். கற்பனையான
எல்லைக்குள் தேடாமல், மனிதர்களில் எவரெல்லாம்
செல்வச் செழிப்புடனும், நல்ல வாழ்க்கையுடனும்
இருக்கிறார்களோ அவர்களிடம் தேட வேண்டும். நீங்கள்
உண்மையாகத் தேடினால், உண்மையான மதஇழ்ச்சியுடன்
இருப்பவரைக் காண முடியும். அவர் ஒரு பாய்மரப் படகைக்
கட்டுபவராகவோ, சேர்ந்திசைக் கோர்வையை
எழுதுபவராகவோ, தன் மகனுக்குப் பாடம் சொல்லித்
தருபவராகவோ, தனது தோட்டத்தில் அழகிய பூக்களை
வளர்ப்பவராகவோ இருக்கக்கூடும். அரிய பொருட்களின்
வழியாக எப்போதாவது கிடைக்கும் மகிழ்ச்சியைத்
தேடுபவராக அவர் இருக்க மாட்டார், ஒவ்வொரு நாளும்,
அதன் இருபத்தி நான்கு மணி நேர வாழ்க்கையிலும்
மனிதக் கூட்டத்தில் இருப்பதில் தான் மகழ்ச்சி இருக்கிறது
என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.
SLPM-C-TML 5
12
12
12
60
உடனடித் தேவைகளுக்கும் சொந்த இருப்திக்காகவும்
தனது வேலைகளை மட்டும் செய்வதில் எவர் ஒருவரும்
மதிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதேபோல் எவர்
ஒருவரும் சமூக உறவுகளை வளர்ப்பதில் மட்டும் கவனம்
செலுத்தி மகிழ்ச்சி அடையவும் முடியாது. அதுவும் அவரைக்
குறுகளான வெளியொன்றுக்குள் நிறுத்திவிடும், நமக்கான
மகிழ்ச்சியைத் தேட நம்மைப் புறவெளியில் நிறுத்திக்
கொண்டு தேடிப் போகவேண்டும்.
உங்கள் நலனை மட்டுமே கருதி வாழ்ந்தால்,
உடனடியான ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும். உங்கள்
சொந்தக் கருத்துகளும் விருப்பங்களும் மட்டும் உங்களைச்
சுற்றிச்சுற்றி நின்று சலிப்பு ೨.೮೫೭ 756/85 கொன்றுவிடும்.
மிகச் சிறந்த மனிதர்களின் மஜிழ்ச்சியான வாழ்க்கையைத்
தேர்வுசெய்து உங்களுடையதாக மாற்றுங்கள். நம்மைச்
சுற்றியுள்ள மனிதர்களுக்கு உதவுவதில் ஆர்வமில்லாமல்,
தன்னகங்காரத்துடன் இருப்பவர்கள் எவரும் வாழ்க்கையின்
பொருளை விளங்கிக்கொள்ள முடியாது உங்கள்
விருப்பங்கள் மூலம் உங்களைப் பெருமைக்குரியவராக
நினைத்துக் கொண்டால், அந்த நினைப்பே மூளைக்குள்
இரண்டு நின்று முடிவை உண்டாக்தஇிவிடும். நமது
ஆசைகளும் விருப்பங்களும் தன் விருப்ப முடிவுகளைக்
கொண்டு வருமா ۶ மகிழ்ச்சியாக இருப்பதைத் தள்ளி
வைத்து விடுமா ۶ அல்லது மஜிழ்ச்சியைப் பெறுவதற்காக
நம்மிடம் இருக்கும் தன் அகங்காரம் உருவாக்கியுள்ள சில
தற்பெருமைகளை விட்டுவிட வேண்டுமா ? உங்களை
நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.
SLPM-C-TML 6
பெருமைக்குரிய நற்காரியங்களோடு மிகச்சிறந்த
மஜிழ்ச்சியைத் தேடுபவர்கள் தங்களுக்கான வாழ்க்கைத்
தத்துவம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
பொதுநலத்தோடு செயல்படுவேன் என்பதே அந்தத்
தத்துவம். உண்மையான மகழ்ச்சி உடைய மனிதர்
போராடுவதில் நம்பிக்கை உடையவராக
ருப்பார். நம்பிக்கைவாதம் பொதுநலத்தை உள்ளடக்கியது
மட்டுமல்ல. சமூகப் பொறுப்பையும், சமூக வலிமையையும்
நடுநிலைப் பார்வையையும் உள்ளடக்கியது
இத்தன்மையில் பொருந்தி நிற்கும் ஆண்களும் பெண்களும்
வாழ்க்கையைத் தீவிரமாக நேசிக்கிறார்கள்; வயதுக்கு
வந்தவர்களின் நடப்புறிலையைச் சரியாகப் புரிந்து
கொள்திறார்கள்; கடினமான நிலைகலை நடுநிலையோடு
எதிர்கொள்திறார்கள்; தீவிரமான இரக்க உணர்வுடன்
அறிவைத் இரட்டுவிறார்கள்; வாழ்வதில் இதிடைக்கும் நெஞ்
கறுதியுடன் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக
இருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்,
'முழுமை.மனிதர்கள்' அவர்கள். தீவிரமான உதவும்
மனப்பானமை என்ணும் வாழ்க்கைத் தத்துவம் நல்ல
வாழ்க்கைக்கு முன் நிபந்தனையாக இருக்கிறது. அதுதான்
தன்னிறைவான வாழ்க்கை; அதுமட்டும்தான்
மனிதர்களுக்கு ೧% 89 அளிக்கும் வழி.
மஜழ்ச்சியின் உட்கூறுகள் எளிமையானவை,
அவற்றை ஒரு விரல்கலால் எண்ணிச் சொல்லி விடலாம். `
08056) அதனுள்ளிருந்தே உருவாகும். அதற்கு
எளிமையான நல்லெண்ணங்களும் தூய்மையான
தன்னுணர்வுகளும் கூடுதல் பாதுகாப்பைத் தருவன. அதற்கு
மதங்கள் கட்டாயம் இல்லை, ஆனால் அறம் சார்ந்த
SLPM-C-TML 7
வாழ்க்கைத் தத்துவத்தை நம்பாதவர்கள் எதனையும்
அடைய முடியாது. தன்னலம் அதன் எதிரி. மற்றவர்களை
மகிழ்ச்சி அடையச் செய்பவர்களே தாங்களும் : DEH)
அடைய முடியும். இதுவே தனித்துவமான அறிதல். ஒரு
பெருங்கூட்டத்தில், தனியாக இருந்து அடையச்கூடிய
வெற்றிக்காண தருணம் இது, இதனைப்பணம் கொடுத்து
வாங்க முடியாது. அதற்கு முன்னால் பணம் மிகச்சிறிய
ஒன்று.
தன்னளவில் முழுமையான இருப்தியை
அடைவதற்கான காரணங்களை அறியாதவர்கள்
மகிழ்ச்சியை அடையவே முடியாது. அமைதியைத்
தேடும் பாதைக்குத் தன்னைச் சோதித்தல் முதல்
தேவை. அதில் செய்வதற்கு ஏராளமுண்டு. ஆனால்
சிறிய அளவே செய்கிறோம். தன்னைத்தானே
சோதனைக்குட்படுத்தும்போது பல குணங்கள்
வெளிப்படும். அவையே ஒவ்வொரு மனிதனையும்
தனித்துவம் கொண்டவர்களாக மாற்றும். தன்
முன்னேற்றமே திருப்தியானது என நினைப்பவர்களும்
அதனை உணர்வர். ஆகவே ஒருவர் மஜிழ்ச்சிக்கான இட்டம்
ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்குள் மிகக்குறைவான
பொருட்களுடன் வாழ்வது, ஆடம்பரமின்றி நளினமாக
இருப்பது, புத்தம் புதிுயனவத்றைத் தேடாமல் தூய்மையை
விரும்புவது போன்ற உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும்.
மதிப்புடன், தீவிரமான கல்வியுடன், அமைதியான
சிந்தனையுடன், நளினமான உரையாடலுடன்,
வெளிப்படையான நடத்தையுடன் ருக்க வேண்டும்.
அத்தோடு வானத்து நட்சத்திரங்களையும் பறக்கும்
பறவைகளையும் பார்த்தபடி, குழந்தைகளையும்,
SLPM-C-TML 8
९4.
துறவிகளையும் நேசிப்பவர்களாகவும், திறந்த மனத்துடன்,
மிகுந்த மகிழ்ச்சியோடு, தைரியத்துடன், அவசரமில்லாமல்,
ஆன்ம பலத்துடன், உத்தரவுகளுக்காக. அல்லாமல், தன்
உணர்வோடு வலிமையான சாதாரண வாழ்வொன்றை
வளர்த்தெடுக்க வேண்டும். இதனை எந்த அரசாங்கமும்
உருவாக்ஜித் தராது. உங்களுக்காக நீங்களே இதைச்
செய்துகொள்ள வேண்டும்.
(467 சொற்கள்)
பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. 20
பயங்கரவாதச் செயல்கள் ஒட்டுமொத்த
உலகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக
மாறிவருதிறது. அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் நாடுகள்
பயங்கரவாத முடிச்சால் சூழப்பட்டுள்ளன. அந்தச்
சுருக்குக் கயிற்றின் முடிச்சு தொடர்ந்து இறுக்கமாஇயும்
வருகிறது. ஒவ்வொருநாளும் - இப்போதும் எப்பொதும்
பயங்கரவாதச் செயல்கள் செய்தித் தாள்களின்
தலைப்புச்செய்திகளாஇ முதல் பக்கத்தை நிரப்புகின்றன.
ஒவ்வொரு நாளும் இந்த பாதகமான செய்திகளோடுதான்
விடிகின்றன. தன்னல நோக்கம் கொண்ட
பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எத்தனை
அப்பாவியான மனித உயிர்கள் பலியாதின்றன ? என்பதை
யாரறிவார்.
விடுதலைக்குப் பிந்திய இந்தியாவில் அந்நிய
சக்திகளின் துண்டுதலால் பயங்கரவாதத்தின் விதைகள்
தூவப்பட்டன இப்போது அதன் வேர்கள் நாடு முழுவதும்
பரவி நிலைமையைப் படுபயங்கரமானதாக - அவலமிடும்
ஒன்றாக மாற்றிவிட்டது. பயங்கரவாதத்தின் அச்சமூட்டும்
SLPM-C-TML 9
வடிவத்தைக் காஸ்மீரில் இப்போதும் பார்க்கிறோம். அதன்
பூர்வ குடிகள் அங்கே அகதிகளைப் போல வாழ
நேர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளையும் இன்று என்ன
நடக்குமோ என்ற அச்சத்தின் நிழலில் வாழ்ந்து
கடக்திறார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல, அஸ்ஸாம்,
வங்காளம், நாகலாந்து முதலான மாநிலங்களும்
பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களால்
சூழப்பட்டுள்ளன். இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும்
சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டுவது சவாலானதாக
இருக்கிறது. ராணுவமும் காவல் துறையும் பயங்கரவாதப்
பிரச்னைகளை ஒழிக்கக் கடுமையாக உழைக்கின்றன.
அரசாங்கமும் பலவிதமான நடவடிக்கைகளை
எடுத்துவருதிறது. ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பும்
தேவை. மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் சமய, மாநில
உணர்வுகளை விட்டுவிட்டு 'இந்தியன்' என்ற உண்ர்வடன்
செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பிரச்னை
ஒரு முடிவுக்கு வரும். எந்தவொரு மனிதனும் இன்னொரு
மனித உயிருக்குத் துன்பம் உண்டாக்க நினைப்பதில்லை.
ஆனால் மிருத்தன்மை கொண்ட பயங்கரவாதிகள் அப்படி
நினைப்பார்கள். இந்த 60860 அமைதியும் இணக்க
உணர்வும் உருவாக ஒவ்வொருவரும் தனித்தனியாகவும்,
அமைப்பாகவும் சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு
முன் நிபந்கனையாகப் பயங்கர வாதத்தை ஒழிப்பதில்
தன்னார்வத்வடன் கூடிய ஒத்துழைப்பை
வழங்கவேண்டும். அதன் பின்புதான் நாடும் சமூகமும்
முன்னேற்றத்தை நோக்தி நடைபோட முடியும்.
SLPM-C-TML 10
Q5.
Q6.
பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க.
Healthy children are an essential component of an effective education
system. Good health reduces absenteeism and dropouts and increases
scholastic performance. An effective school health programme is one of the
most cost-effective approaches in improving community health. School health
activities contribute to healthy lifestyles, thus leading to a healthy future
generation. School children also communicate the health-related information
gained in schools to their families and neighbourhood, contributing to
improved family and community health. The functions of school health
services include detection and treatment of defects, creation and
maintenance of hygienic environment in and around the school, provision of
school meals, and improvement of nutritional status of children. This may be
further enlarged to include health check-ups and immunisation campaigns.
(৪) கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில்
20
அமைத்து எழுதுக : 2x5=10
0) குளத்தங்கரை
0) வெக்கை
01) பூந்தளிர்
(iv) ০1118১85560
യ છહા_(2(0૭56
SLPM-C-TML id
0১) பின்வரும் சொற்களின் பொருள் வேறுபாடு புலப்படுமாறு
ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து எழுதுக :
(i)
(ii)
(iii)
(iv)
(v)
குளம் - குலம்
கடித்து - கடிந்து
தன்மை — தண்மை
திரை - திறை
பழம் ¬ பலம்
(૭ பிரித்து எழுதுக :
(i)
(ii)
(11)
(૪)
(૪)
எட்டுத்திக்கு
ஆயிரமாயிரம்
புள்ளிமான்
போக்திடம்
கருந்தேள்
ദ எதிர்ச்சொற்கள் தருக :
(i)
(ii)
(iii)
(iv)
(v)
SLPM-C-TML
பெண்மை
தோல்வி
திற
அண்மை
பள்ளம்
12
2x5=10
2
1x5=5
1x5=5
(€) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக :
(i)
(ii)
(iii)
(iv)
(v)
விடா முயற்சி வெற்றியில் முடியும்
ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்து நிற்கும்
கோயம்புத்தூர் பழமையான நகரம்
மழைபயெய்தால் குளம் நிறையும்
அரசு அன்றே தண்டுக்கும்
(౨ பிழை நீக்கி எழுதுக :
(i)
(1)
(11)
(iv)
(v)
| SLPM-C-TML
|
குழந்தையின் விரள்கள் பிஞ்சு போன்றது
கன்கள் சிவந்து கோபத்தைக் காட்டியது
பொழுது புழர்ந்தது
அந்த மாவட்டத்தில் ஆரு இல்லை
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வளி
13
1x5=5
1x5=5

