Full Text Transcript
Text below was recognized via OCR from scanned pages and may contain minor errors. Mathematical formulas and symbols may be approximate - please refer to the PDF for the exact equations.
PHKM-C-TML
Civil Services (Main) Examination, 2024
தமிழ் / TAMIL
(கட்டாயத்தாள்) / (Compulsory)
கால அளவு : மூன்று மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 300
Time Allowed : Three Hours Maximum Marks : 300
வினாத்தாளுக்கான விதிமுறைகள்
வினாக்களுக்கு விடை எழுதும் முன் கீழ்க்காணும் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும் :
எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
வினா/வினாப்பகுதிகளுக்கான மதிப்பெண்கள் அவற்றின் எதிரே தரப்பட்டுள்ளன.
விடைகள் தமிழில் (தமிழ் எழுத்தில்) மட்டுமே எழுதுதல் வேண்டும். அல்லது வினாத்தாளில்
குறிப்பிட்டபடி எழுதுதல் வேண்டும்.
எந்தெந்த வினாக்களில் சொற்களின் எண்ணிக்கையளவு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதன்படி
விடை எழுதுதல் வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிக்கையளவுக்கு மிக
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விடை அமைந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
வினா-விடைக் கையேட்டில் எழுதாத பகுதி/பக்கங்கள் இருப்பின் அவற்றின் குறுக்கே கோடு
இடவும்.
Question Paper Specific Instructions
Please read each of the following instructions carefully before attempting questions :
All questions are to be attempted.
The number of marks carried by a question is indicated against it.
Answers must be written in TAMIL (Tamil script) unless otherwise directed in the
question.
Word limit in questions, wherever specified, should be adhered to and if answered in much
longer or shorter than the prescribed length, marks may be deducted.
Any page or portion of the page left blank in the Question-cum-Answer Booklet must be
clearly struck off:
PHKM-C-TML 1
Ql.
Q2.
பின்வருவனற்றுள் ஏதேனும் ஒன்று குறித்து 600 சொற்களில்
கட்டுரை வரைக : 700
மக்களாட்ஜியும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் رم
(b) ந்தியாவில் குடிநீருக்கான சிக்கல் ஏற்படுமா ?
(૭ பழங்குடிப்பண்பாட்டைப் பாதுகாத்தல் :
முயற்சிகளும் வாய்ப்புகளும்
(1 காலிப்பாத்திரங்களே அதிகம் ஓசை எழுப்புகின்றன
பின்வரும் பகுதியைக் கவனமாகப் படித்து, அதன் இறுதியில்
தரப்பட்டுள்ள வினாக்களுக்குத் தெளிவாகவும் சரியாகவும்
சுருக்கமாகவும் விடை எழுதுக : 12x5=60
திறனாய்வு இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே
கருதப்படுகிறது, ஏனெனில், அதன் எல்லைக்குள்
இலக்கியத்தைப் போலவே ஒழுங்கமைப்பைக்
கொண்டிருக்கிறது, லக்தியத்திற்குள் சிலவற்றை
உள்வாங்கும் நிலை ஏற்படும்போது, அதன் சாராம்ச ஓட்டம்
தடைபடும், இசைக்கோலம் ஒன்றில் பொருத்தமற்ற
இசைக்குறிப்பு நுழைக்கப் பட்டால், இசையின் தன்மை
மாறுவதுபோல இலக்கியத்தின் தன்மையிலும் குறை
ஏற்படும்.
மதிழ்ச்சி, உண்மையான உணர்ச்சிகளின் வெளிப்பாடு
தவறான உணர்ச்சிகளில் துயரத்தை உணர்கிறோம். ஒரு
மனிதன் சிலநேரங்களில் தவறான உனர்ச்சிகளில்கூட
மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். வன்முறைச்
செயல்பாடுகளில் ஒருவருக்கு மகிழ்ச்சி திடைக்கலாம்.
அடுத்தவர் சொத்தைப் பறிப்பதில் அல்லது தன்னலத்தோடு
அடுத்தவரைத் துன்பறுத்துவதில் மஜிழ்ச்சி அடையலாம்.
ஆனால், அது மனித மனத்தின் இயல்பான போக்கு அல்ல.
PHKM-C-TML 2
ஒரு திருடன் வெளிச்சத்தைவிட இருட்டை அதிகம்
விரும்பலாம். அது வெளிச்சத்தின் மேன்மையைக் குறைத்து
விடாது.
மற்றவர்கள் ஒவ்வாருவரின் உணர்வுகளும்
நல்லுணர்வுகளாக இருக்கும் போது, நாமும் நம்முடைய
நல்லுணர்வுகளால் ஒன்றிணைய முடியும். அன்பே நம்மை
மற்றவரோடு இணைக்கும். ஆத்திரம் நம்மை
வேறுபடுத்திவிடும். ஆத்திரம் கொண்ட ஒரு மனிதரால்
மற்றவர்களோடு எப்படி ஒன்றினைய முடியும் ? ஆகவே,
அன்பே உண்மையானது ஒதுக்கி வைத்தலும் அகம்பாவமும்
தவறான ஒன்று.
பக்தியை வெளிப்படுத்துவதற்கு உறுதியான சில
பொருள்கள் தேவைப்படுதிறது. இரக்கம் காட்ட வேண்டும்;
ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் பொறுமையும் உறுதியும்
வேண்டும், அதைப்பெறுபவராகவும் இருக்க வேண்டும்.
இதன்முலம் நாம் அறிவது என்னவென்றால், நமது
விழிப்புணர்வு புறக்காரணிகளோடு ஒத்திசைந்து நிற்க்க
க்கூடியது என்பதைத்தான். வெளியுலகத்தில். இயற்கைப்
போக்கோடு ஒத்திசைந்து போவதைத் தவிர்க்க முடிந்தால்,
நம்முன்னே மகனின் இறப்புக்காகக் கண்ணீர்த்துளிகளை
விடும் ஒருவரோடு இணைய முடியாது. பெரும்
கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் மதிழ்ச்சியோடும்
சேரமுடியாது. அதன் பிறகு இந்த உலகத்தின் இருப்புக்கும்
மேலே உயர்ந்து அடைவதற்கு ஏதுமில்லை என்பதை
உணரலாம். அந்த நிலைதான் நிர்வாணம் எனும்
பற்றின்மை. இந்தமாதிரியான சூழ்நிலை குறித்து
இலக்கியம் மதிப்பெதுவும் கொண்டிருக்கவில்லை. எவர்
ஒருவர் ன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல
உணர்கிறாரோ, உலகத்திற்கு அளிக்கிறாரோ,
PHKM-C-TML 3
இன்பத்தையும் துன்பத்தையும் தனது எழுத்தில்
உருவாக்கும் வல்லமையுடன் இருக்கிறாரோ அவரே நல்ல
இலக்கியவாதி, ஒன்றுக்குள்ளேயே இன்பமல்லாத ஒன்றை
அனுபவிப்பது என்பது போதாது. அதனை வெளிப்படுத்தும்
திறனுடன் கலைஞர் திகழவேண்டும் ஆனால், வெவ்வேறு
சூழலில் வெவ்வேறு திசைகளில் மனிதர்கள் முன்னகரவும்
வேண்டும். ஒரே மாதிரியான உணர்வுகள் எல்லா
மனிதர்களிடத்திலும் இருந்தபோதிலும், வேறுபட்ட
சூழ்நிலைகள் தாக்கம் செலுத்துதின்றன என்பதும்,
பொறுப்புணர்வைத் தீர்மானிக்தின்றன என்பதும் உண்மை.
விவசாயிகளோடு தங்கும் வாய்ப்பு இிடைத்தால்,
அவர்களுடன் வாழும் வாய்ப்பு உண்டானால், அவர்களின்
துயரங்களும் ம௫ழ்ச்சியும் நம்முடையது போன்று
தோன்றுவது இயல்பு. அவர்களுடைய வாழ்க்கைச் சூழல்,
நம்முடைய ஆழமான உணர்வுகளைத் தாக்கம் செய்யும்,
இதேபோல்தான் மற்ற உணர்வுகளும் தாக்கம் செய்யும்
என்பதை உணர வேண்டும், சிலமனிதர்கள் விவசாயி
களுக்காகவோ, தோழிலாளர்களுக்காகவோ, ஒரு குறிப்பிட்ட
யக்கத்திற்காகவோ பிரசாரம் செய்வது நீதியற்றது என
விளக்கம் தரப்படுகிறது, இந்த இடத்தில் இலக்தியத்திற்கும்
பிரசாரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு என்பது என்ன ?
என்று கேட்டுக் கொள்ளலாம். ஒரு பிரசாரத்தில் ஒருவரை
விளம்பரப்படுத்தும் நோக்கம் இல்லை என்ற போதிலும்
குறிப்பிட்ட நோக்கம் ஒன்றை நிறைவேற்றும் ஆர்வம் அதில்
இரக்கும் அந்த ஆர்வம் வழிமுறைகளைப்பற்றிக்
கவலைப்படாது இலக்கியம் ஒவ்வொருவரையும்
மென்மைப்படுத்தக் கூடிய-குளிர்ச்சியான காற்றுப்
போன்றது, பிரசாரம் என்பது, வேரோடு தாவரங்களையும்
மரங்களையும் பிடுங்கிப்போடும்
சூறைக்காற்றைப்போன்றது, ஒரே நேரத்தில் குடிசை
PHKM-C-TML 4
Q3.
வீடுகளையும் மாளிகைகளையும் அசைத்துவிடக் கூடியது.
தெளிவற்ற ஒரு பிரசாரம், மகிழ்ச்சிக்கான ஒன்றல்ல,
ஆனால் ஒரு புத்திசாலியான கலைஞர் தமது கலை
ஆக்கத்திற்குள் அழகையும் அதன் சாயல்களையும்
நிரப்புவதன் மூலம் பிரசாரப் பொருண்மையைக்கூட நல்ல
இலக்கியத்தின் பகுதியாக மாற்றிவிடுவார்.
(੩) இறனாய்வு இலக்ஜியத்தின் பகுதியாகக்
கருதப்படுவது ஏன் ?
0) உண்மையான வெளிப்பாட்டுணர்வு, தவறான
வெளிப்பாட்டுணர்வு என்றால் என்ன ?
(0 மனித மனத்தின் இயல்பானபோக்கு இதுவல்ல என்பது
எதனை ?
(1) இந்த எழுத்தாளரின் கருத்துப்படி யார் உண்மையான
இலக்கியவாதி ?
(૭ இலக்கியம், பிரசாரம் இரண்டுக்கும் இடையேயுள்ள
வேறுபாடுகளை விளக்குக.
கீழ்க்காணும் பகுதியை அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு
அளவில் சுருக்கி, உங்கள் சொந்த நடையில் எழுதுக.
தலைப்புத் தேவையில்லை.
பொறாமை என்பது எப்போதும் குறிப்பிட்ட தனிநபரை
மையமிட்டு உருவாகும் குணம் என்பதைக் கவனிக்க
வேண்டும். யாரோ ஒருவர் செல்வந்தராகவோ,
மதிப்புடையவராகவோ, தைரியம் உடையவராகவோ
இருப்பதைப்பார்த்து பொறாமைப் படுவதில்லை நம்மை
ன்னொருவருடனோ, மற்றவரை வேறு ஒருவருடனோ
ஒப்பிட்டுப் பார்க்கும் போது போறாமை உருவாவதை
அறியலாம். உருவான பொறாமை அவருக்கு எதிராக
PHKM-C-TML 5
12
12
12
12
12
60
நிறுத்துகிறது. ஒருவரோடு நெருக்கமான உறவு அல்லது
தொடர்பு இல்லாதவரிடம் பொறாமை உண்டாவதில்லை.
அவர்களை நம்மோடு ஒப்பிட்டுக் கொள்வதில்லை
ஐரோப்பாவில் வாழும் செல்வந்தர் பற்றிக் காசிநகரில்
வாழும் பணக்காரர் அறிந்து கொள்வதுகூட இல்லை. ஒரு
இந்திக் கவிஞருக்கு ஆங்கிலக்கவி ஒருவர்மீது பொறாமை
உண்டாவதில்லை. பொறாமை என்பது எப்போதும்
நெருங்கிய உறவினர், பால்யகாலம் முதல் நண்பர்களாக
இருந்தவர்கள், வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள், அண்டை
வீட்டார் ஆகியோர் மீதே பொறாமை 2 00563 வளர்திறது.
குழந்தைப் பருவம் முதல் நண்பர்களாக இருந்த இருவரில்
ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டும் வகையில்
பொறாமைக்குணம் வளர்த்தெடுக்கிறது, இரண்டு
நண்பர்களில் ஒருவர் தனது முயற்சிகளினால் குறிப்பிட்ட
டத்தை - நல்ல பதவியை அடையும் போது, தானும்
அதுபோல் அடைய வேண்டும் என்று நினைக்காமல் அவரது
வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என நினைக்கிறது
பொறாமை. ஆனால் நீண்டநாள் நண்பர் தனது
வளர்ச்சியைத் தடுப்பதற்கு முயற்சி செய்வார் என
நினைப்பதில்லை. ஒருவர் அவரிடம் உள்ள பொறாமைக்
குணத்தைக் கைவிட நினைக்க வேண்டும், கைவிடும் போது
ஒன்றிணைப்பு ஏற்படும், மற்றவர்கள் மீது காட்டும்
பரிவுணர்வக்கான கூறுகளை வளர்த்தெடுக்க முடியும்,
நம்முடைய செயல்பாடுகள் வழியாக நல்லெண்ணங்களின்
ஒளியை உருவாக்க முடியாது என்று நினைப்பதைவிட,
அதன் எதிர்நிலையில் நம்பிக்கை உண்டாக்கும்
எண்ணங்களை உருவாக்க முடியம் என நினைக்க
வேண்டும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின்மை
PHKM-C-TML 6
வெல்ல முடியாததாகவும் தவிர்க்க முடியாததாகவும்
உள்ளது. நம்முடைய முமுமையான அறிவு,
புத்திசாலித்தனம் கொண்டு அதனை வென்றுவிட முடியாது.
இப்போது, எது முக்கியம் என்றால் ஒரு தனிநபரிடம்
இருக்கும் பொறாமையையும் அதனால்
மறைக்கப்படுவனவற்றையும் நீக்குவதற்குத் தனிநபர் மீது
சமுகம் செலுத்த வேண்டிய கவனம் என்பதே. ஒருவரின்
சமூகம் பற்றிய பார்வையும் புரிதலுமே பொறாமையை
உருவாக்குகிறது என்பதால், சமூகத்திற்கும் பங்குண்டு.
செழிப்பு, உறுதி, உயர் மதிப்பு போன்றனவற்றைத்
தனிநபராகவே ஒருவர் உள்வாங்கி உணரவேண்டும்.
சமூகத்திற்காக மட்டுமல்லாமல் தனது 1063৮867110
அதற்குள் அடங்கியிருக்கிறது என்பதாக நிணைக்க
வேண்டும். நாம் செல்வந்தராக இல்லை அல்லது
உறுதியானவராக இல்லை என்று நினைக்கலாம். ஆனால்
அவரையும் சமூகத்தில் சமமாகக் கருதவேண்டும்.
உயர்வாக நினைக்க்க்கூடாது, அந்த நிலையில்தான்
பொறாமைத் தன்மையின் இறுக்கம் வலியை
உண்டாக்காது. இது எப்படித் தனித்துவமானதாக
மாறுகிறது என்றால், சமூகத்தின் பார்வையில் படும்
விதமாகச் சிலவற்றைச். செய்ய வேண்டும் என
நினைக்கும்போதுதான். பொறாமை என்னும் நஞ்சு எவர்
ஒருவருக்கும் பிறப்பு முதலே வருவதில்லை சமூகத்தின்
இருப்பு, போக்கு காரணமாகச் செயற்கையாகவே
உருவாஜிறது. இந்தப்புரிதலின் வழியாக, மோசமான
எண்ணங்களால் வழிநடத்தப்படும்போது நம்முடைய
நலனுக்கு எதிராகவே நாம் செயல்படுதிறோம்; அதன் மூலம்
PHKM-C-TML 7
மற்றவர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும்
பாதிக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
ஒரு நீதிமான் நீதியை வழங்குதிறார் ஒரு கொத்தனார்
செங்கல்களை அடுக்ஜிச்சுவர் எமுப்புதிறார். சமூகத்தில்
இருப்பின்படி நீதிமான், கொத்தனார் ஆகியோர் இடையே
உயர்வு-தாழ்வு இல்லை, ஆனால் நீதிமான் உயர்வானவர்,
கொத்தனார் தீழானவர் என்ற எண்ணம் சமூகத்தில்
ஆழமாகப் பதிந்துள்ளது. அவர்களிடையே உண்டாகும்
பொறாமை நிரந்தரமாகத் தங்கி விடுதிறது, அதிலிருந்து
விடுபட்டு ஒற்றுமையுடன் முன்னோக்கி நகர்வது
எப்போதாவது தான் நடக்கிறது, ஒருவரிடம் வெளிப்படும்
இரக்ககுணமும், வருத்தப்படும் தன்மையுமே அவரது
பெருமையையும் சிறுமையையும் வெளிப்படுத்தும்.
வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களின்
வாழ்க்கைக்குப் பொருளீட்டவும் உதவுவேன் என நினைக்க
வேண்டும். பணியாளர்கள் வெவ்வேறு விதமான
பாகுபாட்டுடன் செயல்படுகின்றனர் என நினைக்கிறார்கள்
அதனால் பலவிதமான அதிருப்தி உள்ளது, அதனை மாற்றி
தங்கள் பணிகளுக்கு மரியாதையை உண்டாக்க வேண்டும்.
இந்தப் பணி இடத்தில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை
என்பதைச் சொல்லும் விதமாக விளம்பரம்
செய்யவேண்டும். அனைவரும் பார்க்ககூடிய இடத்தில்
பெரிதாக அவற்றை வைக்க வேண்டும், குறிப்பான
சிலவற்றில் மக்கள் சக்கியைத்திரட்டிக் கவனம் குவிப்பதின்
மூலமே பணி டங்களில் நிலவும் பாகுபாடுகளை
இல்லாமல் ஆக்க முடியும்.
(208 சொற்கள்)
PHKM-C-TML 8
৭4 பின்வரும் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதுக. 20
குடிசைத்தொழில்கள், இசறுமுதலீட்டு வணிகங்கள்
குறித்த பேச்சுகள் திரும்பவம் இந்தியாவின்
பேசுபொருளாக மேலெழும்பி வருதின்றன. வீடு போன்ற
சிறிய அளவிலான தொழில் இடங்கள், குறைந்த முதலீடு,
எண்ணிக்கையில் குறைவான தொழிலாளர்கள் என்பதை
நோக்திப் பயணிக்கலாம் என்பதே இதன் முதன்மைக்
காரணம். தனிநபர்களை உற்பத்தியாளர்களாக மாற்றும்
இந்த தொழில்மாதிரிகள் அவர்கள் தரமான வாழ்க்கைகுத்
தேவையான வருமானத்தைத் தருவதோடு
வேலையின்மைப் பிரச்சினைக்கும் தீர்வு தருவதாக
இருக்கிறது, இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு
இவ்வகையான சிறுதொழில்களே சரியான
வளர்ச்சியைத்தரும் என மகாத்மா காந்தி
முன்பேகண்டறிந்து கூறினார். அதனை விடுதலைப்
போராட்ட காலத்திலேயே முன்வைத்தார். மரபான
தொழில்களில் ஈடுபட்டுப் பொருளீட்டிய மக்களிடமிருந்து
கற்றுக்கொண்டு, அதனை உள்வாங்கிய நிலையிலேயே
அதனைச் சொன்னார், தனது முன் உணர்வின்
அடிப்படையில் அவர் சொன்ன அத்திட்டங்களை,
விடுதலைக்குப்பிந்திய அரசியல் தலைமைகள் பெருமளவு
ஏற்றுக்கொள்ளவில்லை, பெருந்தொழிற்சாலைகளுக்கு
அனுமதி அளித்து ஆதிக்கம் செய்ய உதவின.
அப்பெருந்தொழிற்சாலைகள் பொருளாதாரத்தில்
உயர்நிலையில் இருந்தவர்களின் தனியுடைமைகளாக
இருந்தன, பெருகிவரும் மக்கள்தொகை, கல்வி அறிவின்
பரவல், ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகளைப் பற்றிய
விழிப்புணர்வு வேலை வாய்ப்பைத் தேடுநிற்கும்
PHKM-C-TML 9
Q5.
மனிதவரிசைகள் போன்றனவற்றைக் கண்ட
சிந்தனையாளர்களிடம் இரும்பவும் காந்தியச்
சிந்தனைகள் மறு உயிர்ப்புப் பெற்றுள்ளன. அவர்கள்
இப்போது பரிந்துணர்வுடன் மறுபரிசலனை
செய்தின்றனர். ன்று நாட்டின் தேவையை நிறைவு
செய்வதற்கு சிறுதொழில்களில் வளர்ச்சி தவிர்க்க
முடியாதது என்பது உணரப்பட்டுள்ளது, முன்பிருந்தே
தொடராமல் விட்டது தவறு என்பதும் உணரப்படுதிறது.
அதன் விளைவாக நாடு முழுவதும் செயல்படும்
குடிசைத்தொழில்களுக்கு உதவும் வலைப்பின்னல்
தொடர்புகள் உண்டாக்கப்பட்டு வருகிறது.
பின்வரும் பகுதியைத் தமிழில் மொழிபெயர்க்க.
In our democratic system, the press has a vital role. While there has
been large-scale expansion of the print and visual media in recent years, a
focused approach to dealing with major societal and political issues has still
to evolve. There is, as yet, excessive and exaggerated coverage of exposures
and scandals and far too little well-informed comment or analysis of the
various deep-rooted factors which generate the continuing malaise. The
media could make an extremely useful contribution by devoting adequate
coverage to tasks well done, highlighting the achievements of honest and
efficient public servants and organizations, according special attention to
developments in the remote and backward areas of our country. Our media is
free and unfettered. It should be able to expose cases and incidents involving
irregular and unlawful exercise of authority and abuses of all kinds. The
existing ills in our socio-political environment will, on present reckoning,
take considerable time to remedy. The Department of Personnel and
Administrative Reforms should focus on establishing institutions responsible
for all personnel matters — appointments, postings, transfers etc. — without
any external interference. Also, there is a need for adoption of a robust code
of ethics to be followed by those involved in public functioning.
PHKM-C-TML 10
20
९6. (2 கீழ்க்காணும் சொற்களை உமது சொந்த வாக்கியத்தில்
அமைத்து எழுதுக : 2x5=10
(i) மெதுவாக 2
0) கரிசல் | 2
(ऋ) பொய்கை 2
(iv) பேதை 2
(૪) மன்றல் 2
0) பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு
புலப்படுமாறு ஏற்ற சொற்றொடர்களில் அமைத்து
எழுதுக : 2x5=10
ദ திரை- திறை 2
Gi) 56ಗಟಿ - 56010 2
(ऋ) ஊண் — ஊன் 2
(iv) ഖങി-ഖണി 2
യ 6906111 | ¬ விளிப்பு 2
ര பிரித்து எழுதுக : 1x5=5
ദ பலகையொலி 1
ல் தந்தியடி 7
(01) குறுஞ்சுனை 1
(1) தமிழழகன் 1
യ தயிர்க்குடம் 1
PHKM-C-TML 17
(1) எதிர்ச்சொற்கள் தருக :
0)
(ii)
(111)
(iv)
(v)
நெட்டை
முற்போக்கு
கனவு
வன்மை
இருள்
(€) எதிர்மறை வாக்கியமாக மாற்றுக-
(1)
(ii)
(111)
(iv)
(v)
அவள் மழையில் நனைந்தாள்
புத்தகம் அலமாரியில் உள்ளது
கரும்பு ஒரு தாவரம்
இரவில் கடும்பனி பொழிந்தது
தோல்விகண்டு துவண்டுவிடக் கூடாது
( பிழை நீக்கி எழுதுக :
(i)
(ii)
(iii)
(iv)
(v)
PHKM-C-TML
நந்தினி மல்லிகையைச் சூடினால்
நாளும் இரண்டும் சொல்லுக்கு வறுதி
நீடுதுயிழ் நீக்கப்பாடிவந்த நிலா
பொங்குக பொங்கள்
கன்டவர் விண்டுலர்
12
1x5=5
1x5=5

